Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.52,100 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.52,100 கோடி  அந்நிய முதலீடு வெளியேற்றம்

சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் தரவுகளின்படி, கடந்த செப்டம்பரில் ரூ.35,861 கோடி முதலீடு வெளியேறிய நிலையில், அக்டோபரிலும் இந்தச் சரிவு நீடிக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து அக்டோபர் மாதத்தில் இதுவரை ரூ.52,100 கோடியை அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு மற்றும் வலுவான டாலர் மதிப்பு ஆகியவை முதலீட்டாளர்களின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் தரவுகளின்படி, கடந்த செப்டம்பரில் ரூ.35,861 கோடி முதலீடு வெளியேறிய நிலையில், அக்டோபரிலும் இந்தச் சரிவு நீடிக்கிறது. தற்போதைய வெளியேற்றத்தின் மூலம், 2026-ம் ஆண்டில் இதுவரை இந்தியச் சந்தைகளில் இருந்து வெளியேறிய மொத்த அந்நிய முதலீடு ரூ.3.12 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது 2025-ம் ஆண்டின் முழு வெளியேற்றமான ரூ.1.66 லட்சம் கோடியை விட சுமார் இருமடங்கு அதிகமாகும்.

இது குறித்து சாய்ஸ் வெல்த் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு வியூக அதிகாரி தீரஜ் கவுர் கூறுகையில், "அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்புகளால் அமெரிக்க முதலீடுகள் அதிக லாபகரமானதாக மாறியுள்ளன. மேலும், வட ஆசிய சந்தைகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பங்குகளின் வளர்ச்சியும் வெளிநாட்டு நிதிகளை ஈர்த்து வருகிறது" என்றார்.

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு வியூக அதிகாரி வி.கே.விஜயகுமார் தெரிவிக்கையில், "முதலீட்டாளர்கள் நிதிச் சேவைகள் மற்றும் எண்ணெய் துறைப் பங்குகளை விற்று வருகின்றனர். அதேசமயம் நுகர்வோர் சேவைகள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் சுகாதாரத் துறைப் பங்குகளைத் தொடர்ந்து வாங்கி வருகின்றனர். அமெரிக்கப் பத்திர வருவாய் 5.3 சதவீதத்தில் இருந்து 5.08 சதவீதமாக குறைந்ததால் அக்டோபர் 16-ல் மட்டும் சிறிய அளவிலான முதலீடுகள் உள்ளே வந்தன. எனினும் இது தற்காலிகமானதே" என்றார்.

எதிர்கால சந்தை நிலவரம் குறித்து பஜாஜ் புரோக்கிங் நிறுவனத்தின் பபித்ரோ முகர்ஜி குறிப்பிடுகையில், "முதலீட்டாளர்களின் அடுத்தகட்ட நகர்வு, கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க-ஈரான் புவிசார் அரசியல் உறவுகள் மற்றும் 2027-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு நிறுவனங்களின் வருவாய் அறிக்கைகளைச் சார்ந்தே அமையும்" என்று தெரிவித்தார்.

முந்தைய செய்தி
9 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.65 லட்சம் கோடி அதிகரிப்பு
அடுத்த செய்தி
ஹெச்-1பி விசா சர்ச்சை: அமெரிக்க துணை அதிபர் விளக்கம்

தொடர்புடைய செய்திகள்